மாற்றிக் கொள்ள வேண்டியது மனித எண்ணங்களை, மனித வண்ணங்களை அல்ல

மாற்றிக் கொள்ள வேண்டியது மனித எண்ணங்களை, மனித வண்ணங்களை அல்ல

இன்றைய சூழலில் மனிதர்கள் எவரும் பிறரின் குணம் மற்றும் பண்புகளை விரும்புவதை விட அவர்களின் நிறத்தையே அதிகம் விரும்புகின்றனர்.

இங்கு பலரையும் கவர்வது தோலின் வெண்மை நிறமே !?!?வெள்ளை நிறத்தை விரும்பும் யாருக்கும் புரிவதில்லை வெள்ளை என்பது அழகல்ல அது ஓர் நிறம் மட்டுமே என்பது..

வெண்மையைத் தூய்மைக்கு எடுத்துக்காட்டாக நாம் கூறி வந்தாலும் மனிதர்களின் நிஜ தூய்மை உளத்தூய்மையே..

       தோலின் நிற வேறுபாட்டுக்கு காரணம் மெலனின் என்ற நிறமியே…

வெள்ளை நிற தோலை விட மெலனின் அதிக அளவில் சுரக்கும் கருப்பு நிற  தோலானது அதிக வெப்பத்தை தாங்க கூடியது. அதிக அளவு சூரிய வெப்பத்தை உள் வாங்காமல் தோலின் ஆரோக்கியம் காக்க கூடியது.
 கருப்பு நிறத்தை தாழ்வாக எண்ணும் வெள்ளை நிறத் தோலுடையவர்கள் ஆரோக்கியம் குறைந்தவர்களே என்பதை கூறியே ஆக வேண்டும்..
  மொத்தத்தில் இந்த நிற வேறுபாட்டால் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாபவர்கள் பெண்களே ஆவர்.

ஆம், பெண்களே பெரிதளவில் பாதிக்கப் படுகின்றனர்.

 பெண்ணுக்கு திருமணப் பேச்சு தொடங்கும் போதே இந்த நிற பிரச்சனையும் சேர்ந்தே தொடங்குகிறது. பெண் பார்க்க வருகிறார்கள் என்ற பெயரில் அந்த பெண்ணை அலங்கரித்து கடையில் விற்பனைக்கு வைத்துள்ள பொம்மை போல் அனைவரின் முன் நிறுத்தும் போது அந்த பெண் அவளின் புறத்தோற்றம் பற்றிய அத்தனைக் குறைகளையும் கேட்க நேரிடுகிறது. இதிலும் முக்கிய பங்கு வகிப்பது நிறமே!?!?
 இன்னும் அவள் திருமணத்திற்கு பின்பும் , அவள் கர்ப்ப காலங்களிலும் அதிகம் பேசப்படுவது நிறம் குறித்தே.. அவள் ஆரோக்கியத்திற்காக சாப்பிட சொல்வதை விட குழந்தை சிவப்பாக, வெள்ளையாக பிறப்பதற்குண்டான உணவுகளை உட்கொள்ளவே சொல்கின்றனர்.
அவளின் உணர்வுகளை யாருமே மதிப்பதில்லை…
குழந்தை பிறந்த பின்பும் குழந்தையின் நிறமே அங்கும் பேசப்படுகிறது.
குழந்தை என்பது வரம் , அது ஓர் பொக்கிஷம், அது கொண்டாடப்பட வேண்டிய விஷயம். அதைப் புரிந்து கொள்ளாமல் குறைகள் கண்டு கொண்டே இருக்கிறது இன்றைய மனித சமூகம்.
இது குழந்தையின் பெற்றோரை எவ்வளவு பாதிக்கும் என்பதை யாரும் உணர்வதில்லை.
 எல்லோரும் கூறுவதைக் கேட்டு தன் குழந்தை சிவப்பாக மாற வேண்டும் என்ற ஆசை கொண்டு சில தாய்மார்கள் பெரியவர்கள் உபயோகிக்கும் அழகு சாதன பொருட்கள் எல்லாம் உபயோகிப்பதையும் நாமே பார்க்கிறோம்.  மேலும் சமூக வலை தளங்களில் எதையாவது பார்த்து அதையும் தயாரித்து குழந்தைளுக்கு உபயோகிக்கிறார்கள்.
 இது போன்று செய்து கொண்டு இருக்கும் தாய்மார்கள் உணர்வதில்லை தாமே தமது குழந்தையின் ஆரோக்கியத்தைக் குறைத்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை..
 அடுத்தவர்கள் எவ்வளவு குறை கூறினாலும் என் குழந்தையின் எதிர்காலத்தை இந்த நிறம் எள்ளளவும் தீர்மானிக்க போவதில்லை என்ற உறுதியோடு தாய்மார்கள் இருக்க வேண்டும்..
 பிறரின் உணர்வுகளையும் நாமும்  மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அதுவே சிறந்த மனித நேயத்திற்கு எடுத்துக்காட்டு..   வெள்ளை என்பது அழகல்ல, அது ஓர் நிறம் என்பதை புரிந்து கொண்டு அடுத்தவர் உள்ளம் நோகாமல் வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.
பிறரின் வண்ணங்களை மாற்ற முயற்சிப்பதை விட.  தாம் எண்ணங்களை மாற்ற முயற்சி செய்வதே சிறந்தது.
Disclaimer: The views, opinions and positions (including content in any form) expressed within this post are those of the author alone. The accuracy, completeness and validity of any statements made within this article are not guaranteed. We accept no liability for any errors, omissions or representations. The responsibility for intellectual property rights of this content rests with the author and any liability with regards to infringement of intellectual property rights remains with him/her.
Previous article «
Next article »