உங்கள் குழந்தைக்கான உணவை முன் கூட்டியே திட்டமிட ஆறு காரணங்கள் – சில டிப்ஸ்களுடன்

உங்கள் குழந்தைக்கான உணவை முன் கூட்டியே திட்டமிட ஆறு காரணங்கள் - சில டிப்ஸ்களுடன்

Last Updated on

நீங்கள் சாப்பிடப்போகும் உணவை முன்கூட்டியே திட்டமிடுவது என்பது உங்களில் பல தாய்மார்கள் ஏற்கனவே செய்து வரும் ஒன்றே. அதற்கு பல காரணங்கள் இருக்கும். அதே போல உங்கள் குழந்தைகளுக்கான உணவையும் முன்கூட்டியே திட்டமிடுவது சிறந்தது. இன்னும் சொல்லப்போனால், உங்களுடைய உணவைத் திட்டமிடுவதைவிட, குழந்தைகளுக்கான உணவைத் திட்டமிடுவது மிக முக்கியமானது. குழந்தையின் உணவைத் திட்டமிடும்போது, அவர்களின் வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானம், மூளை வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தயாரிக்க வேண்டும்.

நீங்கள் உங்கள் குழந்தைக்கான உணவை முன்கூட்டியே திட்டமிடுவதை தள்ளிபோட்டுகொண்டிக்கும் தாயானால், இப்போது நான் கூறப்போகும் காரணங்களைப் படியுங்கள். ஒரு மாதத்துக்கோ அல்லது ஒரு வாரத்துக்கோ தேவையான உணவை முன்கூட்டியே திட்டமிடுதல் நல்லது. ஒரு மாதம் என்பது சிலருக்கு மிக அதிகமாகப் படலாம், எனவே குறைந்தபட்சம் ஒரு வாரத்துக்குத் தேவையான உணவை, வாரம் ஒரு முறை திட்டமிடுதல் நலம்.  நீங்கள் உணவைத் திட்டமிட சில உபயோகமான டிப்ஸ்களையும் இங்கே பார்க்கலாம்.

உங்கள் பொன்னான நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

இன்றைய தாய்மார்கள் பலர் அலுவலகம் – வீடு என்ற இரட்டை குதிரையில் சவாரி செய்கிறார்கள். அவர்கள் வார இறுதி நாட்களில் சிறிது நேரம் ஒதுக்கி, குழந்தைகளுக்கான அந்த வார உணவைப் பட்டியலிட்டு வைத்தால், தினமும் காலையில் என்ன சமைப்பது என்ற குழப்பம் இல்லாமல் இருக்கலாம். உங்கள் குழந்தையின் வயதைப் பொறுத்து, எத்தனை வேளை உணவு, எத்தனை வேளை ஸ்னாக்ஸ் தர வேண்டுமோ, அதனை முன்கூட்டியே எழுதி வைத்தால், அதற்கேற்றாற் போல் தேவையான பொருட்களையும் வாங்கி வைத்துக்கொள்ளலாம். காலை வேளையில், திடீரென ஏதேனும் தீர்ந்துவிட்டால், அவசரமாக கணவரை கடைக்கு அனுப்ப வேண்டிய அவசியமும் இருக்காது. மேலும், முந்தைய இரவே அட்டவணையைப் பார்த்து, அடுத்த நாள் உணவுக்கான ஆயத்த வேலைகளை செய்துவிட்டால், காலை வேளையில் உங்கள் பொன்னான நேரம் மிச்சமாகும்.

உங்கள் பணத்தை சேமிக்கலாம்.

குழந்தையின் வயதைப் பொறுத்து, அவர்கள் சாப்பிடும் உணவுகளை முன்கூட்டியே பட்டியலிட்டு, அதற்கு தேவையான மூலப்பொருட்களை மட்டும் வாங்கினால், உங்களுக்கு செலவு மிச்சமாகும். எந்த ஒரு திட்டமிடுதலும் இல்லாமல், கடைக்குச் சென்று கண்ணில்பட்டதை எல்லாம் வாங்கி வைத்தால், அதனை எப்போது எவ்வளவு சமைக்க வேண்டுமென்ற யோசனையே இல்லாமல் மறந்துவிடுவீர்கள். பல பொருட்கள் காலாவதியாகும் நிலையும் ஏற்படும். எனவே, அந்த வாரத்துக்குத் தேவையான பொருட்களை மட்டும் வாங்கினால், பொருளும் வீணாகாது, குறைவான அளவே வாங்குவதால், காய்கறிகளும், பழங்களும் ஃப்ரெஷாக இருக்கும்.

உதாரணத்துக்கு, குழந்தைக்கு வாரம் இரு முறை ஆப்பிள், இரு முறை ஆரஞ்சு, ஒரு முறை மாதுளை, மற்றும் தினமும் ஒரு வாழை தருகிறீர்கள் என்றால், அதற்கு தேவையான அளவு மட்டும் பழங்களை வாங்கினால் தேவையில்லாமல் நிறைய வாங்குவதையும், அப்படி வாங்கிய பழங்கள் கெடாமல் இருப்பதையும் தவிர்க்கலாம்.

உங்கள் குழந்தைக்குக் கிடைக்கும் ஊட்டச்சத்தை உறுதி செய்யலாம்.

உணவைத் திட்டமிட்டு அட்டவணைப்படுத்தி கொடுக்கும்போது, உங்கள் குழந்தைக்கு கிடைக்கும் சரிவிகித ஊட்டச்சத்தை நீங்கள் உறுதி செய்யலாம். உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி ஒரு நாளைக்கு கிடைக்கவேண்டிய கார்போஹைட்ரெட், ப்ரோடீன், அமினோ ஆசிட்ஸ், விட்டமின்ஸ் போன்ற

அணைத்து ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கிய ஒரு உணவை, தினசரி திட்டமிட நிறைய நேரம் பிடிக்கும்.

உதாரணத்துக்கு, உணவைத் திட்டமிடும்போது தினமும் இரு வேளை வி-நரிஷ் ஊட்டச்சத்து பானத்தையும்  சேருங்கள். இது உங்கள் குழந்தையை ஆரோக்கியமாகவம் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவும். எப்போதும் சுவையையே விரும்பும் குழந்தைகள் மற்றும் ஆரோக்கியத்தையே விரும்பும் பெற்றோர் ஆகியோரை மனதில் வைத்து, ஒரு அப்பாவால் மூன்று வருடங்கள் ஆராய்ச்சி செய்யப்பட்டு, குழந்தைகள் விரும்பும் சுவையும், பெற்றோர் விரும்பும் ஆரோக்கியமும் ஒருசேர கண்டுபிடிக்கப்பட்டதுதான் வி-நரிஷ்.

இது ஸ்ட்ராபெர்ரி, சாகோ குக்கீ, கேசர்- பிஸ்தா, பாதாம் போன்ற குழந்தைகள் விரும்பும் சுவைகளில் கிடைக்கிறது. மேலும் செயற்கை சுவையூட்டிகள், நிறமூட்டிகள், பாதுகாப்பூட்டிகள் எதுவும் இல்லாததால் பெற்றோரும் வி-நரிஷை விரும்புகிறார்கள். இதில் குழந்தைகளுக்கான 40 ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.

உங்கள் குழந்தையின் விருப்பப்படி சமைக்கலாம்.

 உங்கள் குழந்தைக்கான உணவுப் பட்டியலைத் தயார் செய்யும் பொழுது, அவர்களையும் அந்த வேலையில் ஈடுபடுத்தலாம். அப்போது அவர்களின் விருப்பங்களை அறிந்து, அதன்படி உணவுத் திட்டத்தை கொண்டு வரலாம். குழந்தையையும் இதில் ஈடுபடுத்தினால், மேலும் இரண்டு வகைகளில் அவர்களுக்கு நன்மை பயக்கும்.

ஒன்று, குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து எடுக்கும் முடிவுகளில் அவர்களின் அபிப்பிராயத்தையும் கேட்டு முடிவெடுத்தல், அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும்.

இரண்டு, பல்வேறு உணவு வகைகளைப் பற்றியும், அதன் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துக்களைப் பற்றியும் குழந்தைகள் அறிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

உங்கள் குழந்தை விரும்பும் வண்ணங்களிலும் சத்துக்குள்ள உணவைத்  திட்டமிடலாம்.

  • கீரை, கேரட்  மாற்றும் பீட்ரூட் ஆகியவற்றை மாவுடன் கலந்து வண்ண வண்ண இட்லியாகவோ தோசையாகவோ செய்து குடுக்கலாம்.
  • வி நரிஷில் வரும் ஸ்ட்ராபெர்ரி சுவையில், நிஜ ஸ்ட்ராபெர்ரி துண்டுகள் இருப்பதனால், அழகான பிங்க் நிறமும், அட்டகாசமான ஸ்ட்ராபெர்ரி சுவையும் இருக்கிறது. குழந்தைகள் இதனை விரும்பிக் குடிக்க ஆவலாக இருப்பார்கள். இதனைத் தயாரிக்கும் நேரமும் மிகக் குறைவு.
  • பூரி சப்பாத்தி ஆகியவற்றை குக்கி கட்டர் கொண்டு, நட்சத்திரம், இதயம், நிலா, கார்ட்டூன் போன்ற விதவிதமான வடிவங்களில் கட் செய்து  கொடுக்கலாம்.
  • சாக்லேட் செய்ய பயன்படுத்தப்படும் சிலிக்கான் மோல்டுகளில் இட்லி ஊற்றிக் கொடுக்கலாம். இது குழந்தைகள் சுலபமாக ஒரே வாயில் எடுத்துச் சாப்பிட வசதியாக இருக்கும்.

புதிய உணவு வகைகளைச் செய்து அசத்தலாம்.

தினசரி இட்லி, தோசை, உப்புமா என ஒரே மாதிரியாக உணவு வகைகளை சமைப்பவரா நீங்கள்? ஒரு வாரம் உணவை முன்கூட்டியே திட்டமிட்டால் கண்டிப்பாக ரிபீட்  சமையல் வராது. வார இறுதியில் உணவைத் திட்டமிட்டால் இன்டெர்நெட்டிலும், டிவியிலும் பார்க்கும் புதிய வகை உணவுகளை ஒருமுறை செய்து பார்த்து, அந்த வார பட்டியலில் இணைக்கலாம். புதிய உணவு வகைகளை குழந்தைகளுடன் சேர்ந்து செய்தால், அவர்களும் உற்சாகத்துடன் சிறு சிறு வேலைகளில் ஈடுபடுவார்கள். தினசரி புதுப்புது உணவு வகைகளைச் சாப்பிட குழந்தைகள் ஆவலுடன் காத்திருப்பார்கள்.

உணவு வீணாவதைத் தவிர்க்கலாம்.

கடைசி மற்றும் முக்கியக் காரணமாக நான் கூறுவது, உணவை மேற்கண்ட வகையில் முன்கூட்டியேத் திட்டமிட்டால், உணவு வீணாவதை முற்றிலுமாகத் தவிர்க்கலாம். பல நாட்கள் பள்ளிக்கு எடுத்துச் செல்லும் உணவை அப்படியே கொண்டு வருவார்கள் குழந்தைகள். அது போன்ற சமயங்களில் குழந்தைகளையும் கலந்து பேசி, அடுத்த வாரத்துக்கான உணவைத் திட்டமிட்டால், அவர்கள் விருப்பமும் நிறைவேறுவதால் மிகுந்த மகிழ்ச்சியுடன் பள்ளியில் மதிய உணவை மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். அதே போல சமையலுக்குத் தேவையான காய்கறிகளைத் திட்டமிட்டபடி வாங்குவதால், தேவையில்லாமல் கெட்டுப் போய் குப்பையில் வீசுவதையும் தவிர்க்கலாம். மளிகைப் பொருட்களையும் அதே போல வாங்கினால், வீணாவதைக் குறைக்கலாம். குழந்தைக்கும் உணவின் அருமையைப் பற்றி எடுத்துக் கூறவும், விவசாயத்தை அறிமுகப்படுத்தவும், உணவைத் திட்டமிடும் நேரத்தை ஒரு நல்ல வாய்ப்பாக எடுத்துக்கொள்ளலாம்.

உங்கள் குழந்தைக்கான உணவை முன்கூட்டியே திட்டமிடுவது குறித்த பல முக்கிய காரணங்களையும், அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் பார்த்தோம். ஒரு முறை இதைச் செய்து பாருங்கள், உங்களுக்கே இதன் அருமை புரியும். அதற்கு அடுத்தடுத்த வாரங்களும் தொடர்ந்து

உணவைத் திட்டமிடுவீர்கள். நீங்கள் ஏற்கனவே உணவைத் திட்டமிடும் தாயானால் உங்களுடைய கருத்துக்களையும் இங்கே பகிருங்கள்.

Disclaimer: The views, opinions and positions (including content in any form) expressed within this post are those of the author alone. The accuracy, completeness and validity of any statements made within this article are not guaranteed. We accept no liability for any errors, omissions or representations. The responsibility for intellectual property rights of this content rests with the author and any liability with regards to infringement of intellectual property rights remains with him/her.

Previous articleHow to Deal With Stress Over Providing Your Child With Better Education
Next articleHow to Make School an Enjoyable Experience for Your Child